சைக்கிளை திருடிய முன்னாள் நீதிபதியின் பேரன் - அதிர வைக்கும் சம்பவம்

chennai chennaicrime cycletheft
By Petchi Avudaiappan Mar 04, 2022 07:50 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

சென்னையில் முன்னாள் நீதிபதியின் பேரன் ஒருவர் சைக்கிளை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபகாலமாக சென்னையில் உள்ள அபிராமிபுரம், ராயப்பேட்டை, பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களில் விலை உயர்ந்த சைக்கிள்கள் அதிக அளவில் திருடு போவதாக புகார் எழுந்தது. இதனிடையே அபிராமிபுரத்தின் ஆர்கே நகரை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் வீட்டில் சைக்கிளை ஒருவர் திருடிய நிலையில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சூளைமேடு பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

அவரிடம் இருந்து ஏராளமான சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டதுடன் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.  சரவணன் முன்னாள் நீதிபதியின் பேரன் எனவும், தனது தந்தை அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைமை பொறியாளர் பணியில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் பிஎஸ்சி படித்திருக்கும் சரவணன்  போதை பழக்கத்திற்கு ஆளான சரவணன் தாய், தந்தை மறைவிற்கு பிறகு பெற்றோருக்கு சொந்தமான இடத்தை விற்றதில் கிடைத்த பணத்தில் தொழில் தொடங்கி நஷ்டத்தை சந்தித்துள்ளார். இதனைத் தொடர்ந்தே தான் சைக்கிள் திருடியதாக சரவணன் கூறியுள்ளார்.