ரோகித் சர்மா ஓய்வு எடுக்க வேண்டிய நேரம் இதுதான் - முன்னாள் வீரர் அட்வைஸ்
ரோகித் சர்மா சில ஆட்டங்களில் ஓய்வு எடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.
ரோகித் சர்மா
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த சில போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருவது அந்த அணி ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. இந்த சீசனில் இதுவரை 11 போட்டியில் விளையாடிய ரோகித் சர்மா 191 ரன்கள் மட்டும் தான் அடித்திருக்கிறார்.
இதில் சராசரி 17 ரன்கள் என்ற மோசமான அளவில் இருக்கிறது. இதில் இரண்டு டக் அவுட்டுகள் அடங்கும். இந்நிலையில், இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், சில போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு தேவை.
சேவாக் அறிவுரை
இந்த ஐபிஎல் தொடரில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா சரியாக விளையாடவில்லை. அவருடைய வழக்கமான அதிரடி ஆட்டத்தைப் பார்க்க முடியவில்லை. அவருடைய மனதுக்குள் ஏதோ ஒரு குழப்பம் இருக்கிறது.
எனவே அதற்கு ஒரே தீர்வாக ஒரு சில போட்டிகளில் ஓய்வெடுத்துக் கொண்டு புத்துணர்ச்சியுடன் களமிறங்க வேண்டும். அப்படி செய்தால் அவர் அதிக ரன்களை எடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.