முன்னால் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை
வேலுார் மாவட்டம் காட்பாடியில் திருவள்ளூவர் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு கட்டுபாட்டு அலுவலரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
காட்பாடி விஜிராவ் நகரில் காட்பாடி சேர்க்காட்டில் உள்ள திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வு கட்டுபாட்டு அலுவலர் அசோகனின் இரண்டாவது மனைவி ரேனுகா தேவி காட்பாடியில் உள்ள அக்சிலியம் மகளிர் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார்.
அசோகன் தேர்வு கட்டுபாட்டு அலுவலராக இருந்த காலத்தில் அதிக அளவு முறைகேடு செய்ததாகவும் லஞ்சம் வாங்கியதாக 2017 ஆம் ஆண்டு அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இதனை அடுத்து இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வாளர் விஜய் தலைமையில் அசோகனின் மனைவி ரேனுகாதேவி வீட்டில் 6 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.