ஜடேஜாவிடம் இருக்கும் புது பிரச்சனை - சிக்கலில் மாட்டிக் கொண்ட சென்னை அணி
ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் புது கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஜடேஜாவிடன் பிரச்சனை உள்ளதாக அந்த அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் பீதியை கிளப்பியுள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் நாளை மார்ச் 26ஆம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இதில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதனிடையே நேற்றைய தினம் சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகினார். புதிய கேப்டனாக அணியின் மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் தோனி இந்த சீசன் முழுவதும் இருந்து தயார் படுத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜடேஜா கேப்டன்சி செய்வதில் பிரச்சினை இருப்பதாக பத்ரிநாத் கூறியுள்ளார். இதுகுறித்து பேட்டியளித்துள்ள அவர், ஜடேஜா எப்போதுமே பந்து வீச்சாளராகத் தான் இருந்துள்ளார்.
அதேசமயம் கடந்த 2 சீசன்களாக பேட்டிங்கில் தன்னை ஒரு ராஜாவாக மாற்றிக்கொண்டு தரமான ஆல்ரவுண்டர் உருவாகியுள்ளதால் 3D கிரிக்கெட்டராக உருவெடுத்தார். ஆனால் தற்போது கேப்டன் பதவியும் வந்து 4D கிரிக்கெட்டராக மாறியுள்ளார்.
குறிப்பாக ஜடேஜா இதுவரை எந்தவொரு அணியையும் டி20 கிரிக்கெட்டில் வழிநடத்தியதே இல்லை. எனவே அணியின் முக்கிய பொறுப்புகள் அவரின் தலையில் தான் உள்ளது. முக்கிய இடங்களில் ஃபீல்டிங்,பேட்டிங் செய்ய வேண்டும். பவுலிங்கில் உதவ வேண்டும் என எல்லாவற்றையும் மீறி தான் கேப்டன்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதால் இது சவாலாக இருக்கும் என பத்ரிநாத் கூறியுள்ளார்.