ஐபிஎல் 2025; கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அணியின் கேப்டனாகும் சிஎஸ்கே முன்னாள் வீரர்?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சிஎஸ்கே முன்னாள் வீரர் கேப்டனாகபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு பெரிய மவுசு உண்டு. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகளுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.
வருகின்ற ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ஐபிஎல் தொடர் நடக்கவிருக்கிறது. கடந்த மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் அஜிங்கியா ரஹானே கொல்கத்தா அணியால் அடிப்படை விலையான 1.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், கொல்கத்தா அணிக்கு யார் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது. அணியில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் கேப்டனாக்கப்படலாம் என்றும், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ரின்கு சிங்கும் கேப்டன்களாக நியமிக்கப்படலாம் என விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சிஎஸ்கே வீரர்
மேலும் ரஸல் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்ப்பார்ப்பும் எழுந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக சீனியர் வீரரான அஜிங்கிய ரஹானே கேப்டனாக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ரஹானே இந்திய அணியில் தற்போது விளையாடவில்லை.
ஆனால் தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டக் அலி தொடரில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த சூழலில்தான், கொல்கத்தா அணிக்கு ரஹானே கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஷ்ரேயஸ் ஐயர் கேப்டனாக இருந்த அவர் பஞ்சாப் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.
தற்போது கேப்டன் இல்லாத நிலையில், ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க, சீனியர் வீரரான ரஹானேவை நியமிக்க திட்டமிட்டுள்ளது கொல்கத்தா அணி. ரஹானே இதற்கு முன்னர் ராஜஸ்தான் அணியை வழிநடத்தியுள்ளார்.