இலங்கை அதிபருக்கு எதிரான போராட்டம் : முன்னாள் கிரிக்கெட் வீரர் மக்களோடு மக்களாக பங்கேற்பு
இலங்கை கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மக்கள் வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால் பல மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது.
கடந்த சில 10 ஆண்டுகளில் தமிழ் - சிங்களர்கள் மோதல், பௌத்தர்கள் - இஸ்லாமியர்கள் மோதலால் மொழி, மத ரீதியாக பிளவுபட்டு கிடந்த இலங்கை மக்கள் தற்போது அனைத்து வேற்றுமைகளையும் தூக்கி எறிந்து விட்டு நாட்டுக்காக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அதிபர்கோத்தபய ராஜபக்சேவின் அலுவலகத்திற்கு முன்பு ஒன்று கூடிய பொதுமக்கள், கோ கோத்தபய கோ என்ற கோஷங்களை எழுப்பினர்.
மேலும், இலங்கை அதிபர் ராஜபக்சே பதவி விலக கோரியும் மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து கண்டனம் தெரிவித்து வந்த இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா, தற்போது இலங்கை அதிபருக்கு எதிராக நடைபெறும் போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.