முன்னாள் முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதி - பொதுமக்கள் அதிர்ச்சி
கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அச்சுதானந்தன் திருவனந்தபுரத்தில் தனது மகன் அருண்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
98 வயதான அவருக்கு நேற்று முன்தினம் இரவு இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து திருவனந்தபுரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அச்சுதானந்தனுக்கு இரைப்பை குடல் அழற்சி மற்றும் சிறுநீரக கோளாறுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.