காட்சிகள் மாறலாம் விஸ்வாசம் மாறாது : மு.க.அழகிரியின் நறுக் ட்வீட்
முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
அழகிரி நீக்கம்
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திமுகவின் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி பதவியிலிருந்து நீக்கப்பட்ட நாள் இன்று. 2014 ஆண்டு ஜனவரிமாதம் 24- ம் தேதி திமுகவின் பொதுச்செயலாளராக இருந்த அன்பழகன் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அந்த அற்க்கையில் திமுகவில் குழப்பம் விளைவிக்க முயன்ற திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க. அழகிரி இனியும் தொடர்ந்து கட்சியில் நீடிப்பது முறையல்ல என்ற காரணத்தாலும், அது திமுகவின் கட்டுப்பாட்டை மேலும் குலைத்து விடும் என்பதாலும் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் அழகிரி தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என தெரிவித்திருந்தார்.
ட்விட்டர் பதிவு ஆதரவாளர்கள் மகிழ்ச்சி
இதனை தொடர்ந்து மு.க.அழகிரி திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். இதனால் 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் அழகிரி நிரந்தரமாகவே திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் மு.க அழகிரி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் தனது ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.
— MK Alagiri (@MkAlagiri_offl) January 23, 2023
அதில் ஆட்சிகள் மாறலாம் காட்சிகள் மாறலாம் ஆனால் விஸ்வாசம் என்றும் மாறாது எனபதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை வந்த அமைச்சர் உதயநிதி மு.க அழகிரியை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி திமுகவில் இணைவது குறித்து கட்சி நிர்வாகம் தான் முடிவு செய்யும் என கூறினார். இவ்வாறான நிலையில் தற்போது அழகிரியின் ட்விட்டர் பதிவு அவரது ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.