இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓடிய திருமணமான இளம்பெண் - காதலனே அடித்து கொன்ற பரபரப்பு சம்பவம்!
இளம் பெண்ணை கள்ள காதலன் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் காதல்
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவற்றின் மகள் வினோதினி (19) . இவர் தென்காசி மாவட்டம் வலசை கிராமத்தை சேர்ந்த மனோ ரஞ்சித் என்பவரை இன்ஸ்டாகிராமில் காதலித்து வந்துள்ளார். இதனிடையே வினோதினிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன் வேறொரு நபருடன் திருமணம் ஆகியுள்ளது.
இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த இன்ஸ்டாகிராமில் காதலன் மனோ ரஞ்சித் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்று பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடல் நலம் தேறினார். இதனைத் தொடர்ந்து திருமணமான பிறகும் வினோதினி முன்னாள் காதலன் மனோ ரஞ்சித்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர் தனது கணவரை விட்டு விட்டு மனோரஞ்சித்தை பார்க்க வலசை என்ற கிராமத்திற்கு வந்து இருவரும் ஒரே வீட்டில் தங்கி வந்துள்ளனர்.
இதற்கியையே வினோதினியுடன் வேறு சில ஆண் நண்பர்களும் இன்ஸ்டாகிராமில் பேசி வந்துள்ளனர். இதை அறிந்த மனோ ரஞ்சித் வினோதினியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இளம்பெண் கொலை
இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் காதலன் மனோ ரஞ்சித் வினோதினியை கொலை செய்ய முடிவு செய்து ஆளில்லாத காட்டுப்பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு வந்த பின்னரும் வேறு ஆண் நண்பர்களுடன் பேசுவதை நிறுத்திவிடுமாறு வினோனியிடம் கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் மோதல் ஏற்படவே மனோ ரஞ்சித் கம்பால் வினோதினியை தாங்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த வினோதினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தனது நண்பர்களான மாகா பிரபு, பரத், மணிகண்டன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரின் உதவியுடன் வினோதினியின் உடலை சாக்குப்பையில் கட்டி பயன்பாடற்ற கிணற்றில் வீசியுள்ளார் மனோ ரஞ்சித்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மனோ ரஞ்சித் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்த போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.