போலீசின் கன்னத்தில் ஓங்கி அறைந்த முன்னாள் பாஜக எம்.எல்.ஏ

Bangaluru Ex-BJP MLA slapping police constable
By Thahir Nov 04, 2021 12:41 PM GMT
Report

பெங்களூருவில் போலிஸ்காரரின் கன்னத்தில் பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவின் ராய்ச்சூரில் பாஜக சிறுபான்மையினர் பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு முன்னாள் பாஜக எம்.எல்.ஏ.வும் அக்கட்சியின் நிர்வாகியுமான பாப்பா ரெட்டி தலைமைத் தாங்கினார்.

அப்போது சித்தராமையாவின் படத்தை பாஜகவினர் பெட்ரோல் ஊற்றி எரிக்க முற்பட்டனர். அதனை மஃப்டியில் இருந்த ராகவேந்திரா உள்ளிட்ட போலிஸார் தடுத்தனர்.

அதனைக் கண்ட பாப்பா ரெட்டி அந்த போலிஸின் கண்ணத்தில் அறைந்தார். இதனால் காவல்துறையினர் மத்தியில் பாப்பா ரெட்டி கடுமையான எதிர்ப்புக்கு ஆளானார்.

மேலும் போலிஸை கண்ணத்தில் அறையும் நிகழ்வு வீடியோவாகவும் எடுக்கப்பட்டு இணையத்தில் வைரலாக்கப்பட்டது.

இதனையடுத்து பாஜக நிர்வாகியின் செயல் கடுமையான விமர்சனங்களுக்கும், கண்டனங்களுக்கும் ஆளானது. இதனால் பதறிப்போன பாப்பா ரெட்டி போலிஸாரை அறைந்தது தொடர்பாக மழுப்பலாக விளக்கம் ஒன்றினை கொடுத்துள்ளார்.

அதில், அந்த போலிஸார் சீருடையில் இல்லாததால் கட்சியைச் சேர்ந்தவர் என நினைத்து அறைந்துவிட்டதாக கூறியிருக்கிறார். கட்சித் தொண்டர்கள் என நினைத்து என்று அவர் கூறியிருப்பது தற்போது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.