அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

ADMK
By Thahir Aug 12, 2022 02:41 AM GMT
Report

நாமக்கல் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி. பாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

வருமான வரித்துறையினர் சோதனை 

கே.பி.பி.பாஸ்கர் பணி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 4.72 கோடி மதிப்பிலான சொத்துக்களை சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர் அவரது பெயரிலும் மனைவி பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகவும், 31.5% சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சோதனை நடைபெறுவதாகவும் விளக்கம்.