யார் இந்த பெண்? AI ரோபோவுடன் திருமணம் - கதறும் ஆண்கள்!
பெண் ஒருவர் AI ரோபோட்டை திருமணம் செய்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
AI ரோபோட்
நியூயார்க் நகரை சேர்ந்தவர் ரோசன்னா ரமோஸ்(36). இவர் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட எரோன் எனப்படும் மெய்நிகர் ரோபோட் ஒன்றை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனை 2022ஆம் ஆண்டு இவரே உருவாக்கியுள்ளார். ஜப்பானிய காதாபாத்திரம் ஒன்றை பார்த்து உந்தப்பட்டு தயாரித்துள்ளார். தன்னுடைய முன்னாள் காதல்களோடு ஒப்பிடுகையில் இந்த காதல் உறவு மிகவும், மகிழ்ச்சியாக இருக்கிறது.
திருமணம்
எந்த பிரச்சனையும் இல்லை. தன்னுடைய ரோபோட் கணவருக்கு எந்த வித ஈகோவும், குடும்பம் சார்ந்த பிரச்சனைகளும் இல்லை என்றும். குடும்பம் , குழந்தை என்று எதுவும் நான் செய்ய வேண்டியதில்லை.

தான் விரும்பியதை தன்னால் செய்யமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஜோடிகளாக ரோசன்னா போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.