பாஜக தலைவர் காரில் சிக்கிய ஈ.வி.எம் மெஷின்: கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்

public bjp candidate krihnendu evm
By Jon Apr 02, 2021 11:16 AM GMT
Report

 தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. அதில் அஸ்ஸாமில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இங்கு காங்கிரஸ் - பாஜக தலைமையிலான கூட்டணி களம காண்கிறது. கருத்து கணிப்புகள் அனைத்தும் போட்டி கடுமையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ், பாஜகவின் தேசிய தலைவர்கள் அஸ்ஸாமில் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அஸ்ஸாமில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் ரதாபரி தொகுதியில் பாஜக தலைவர் ஒருவரின் வாகனத்தில் ஈ.வி.எம் வாக்குப்பதிவு இருப்பது கண்டறியப்பட்டிருந்தது.  

இதனைத் தொடர்ந்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் ஆணையம் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் புகார் அளித்திருந்தது. தேர்தல் ஆணையத்தின் வாகனம் பழுதடைந்ததால் மாற்று வாகனத்தில் ஈ.வி.எம் எடுத்துச் செல்லப்பட்டதாகவும், அது பாஜக உறுப்பினரின் வாகனம் என்பது தெரியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்த சர்ச்சையைத் தொடர்ந்து நான்கு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அந்த ஈ.வி.எம் இயந்திரம் சம்மந்தப்பட்ட தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.