முதலமைச்சர் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் முறைப்படி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றிபெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் உறுதிமொழி ஏற்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பேரவை வளாகத்தில் சபாநாயகர் அறையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்று கொண்டார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
இவ்விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி, விசிக தலைவர் திருமாவளவன், சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச்செயலாளர் முத்தரசன் மற்றும் ஜவாஹிருதுல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எமஎல்ஏவாக பதவியேற்றத்தால், தமிழ்நாடு சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 18-ஆக. உயர்ந்துள்ளது.
மேலும், 34 ஆண்டுகளுக்கு பின்னர் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது.