ஈரோடு இடைத்தேர்தல் - காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வாக்களித்தார்
ஈரோடு கிழக்கு தொகுதியில் சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது. காலையிலேயே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.
ஈரோடு இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியிருக்கிறது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவானது மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என 77 பேர் களம் காண்கின்றனர்.
இளங்கோவன் தேர்தல்
மொத்தம் 2.27 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க, ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் 52 இடங்களில் 238 வாக்குசாவடிகளும், இது தவிர கூடுதலாக 20% என்ற அடிப்படையில், 48 ரிசர்வ் மையங்கள் என மொத்தம் 286 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று வாக்களித்து தனது ஜனநாயக கடமையை காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நிறைவேற்றினார்.