வீடு திரும்பினார் ஈவிகேஎஸ் இளங்கோவன் : மகிழ்ச்சியில் குடும்பத்தினர்
Indian National Congress
E. V. K. S. Elangovan
By Irumporai
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக தகவல் வெலியாகியுள்ளது.
ஈ வி கே எஸ் இளங்கோவன்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வீடு திரும்பினார்
பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இளங்கோவன் நலமுடன் இருப்பதாகவும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த நிலையில் மீண்டும் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து தற்போது அனைத்து பரிசோதனைகளும் முடிந்து வீடு திரும்பியுள்ளார்.