நெஞ்சுவலியால் துடித்த EVKS.இளங்கோவன் - மருத்துவமனையில் அனுமதி

E. V. K. S. Elangovan Chennai
By Thahir Mar 16, 2023 02:38 AM GMT
Report

நெஞ்சுவலி காரணமாக காங்கிரஸ் எம்எல்ஏ இ.வி.கே.எஸ்.இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில்  இ.வி.கே.எஸ்

அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ இ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெஞ்சுவலியால் துடித்த EVKS.இளங்கோவன் - மருத்துவமனையில் அனுமதி | Evks Elangovan Hospital Admission

அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாதகவும், அதனால் நேற்று இரவு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் நலமாக இருக்கிறார் என செய்தி வெளியாகியுள்ளது.