ஈவிகேஎஸ் இளங்கோவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி : சோகத்தில் குடும்பத்தினர்

Nationalist Congress Party E. V. K. S. Elangovan Tamil nadu
By Irumporai Mar 26, 2023 07:22 AM GMT
Report

காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 ஈவிகேஎஸ் இளங்கோவன் 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே எஸ் இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் நலமுடன் இருப்பதாகவும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி : சோகத்தில் குடும்பத்தினர் | Evks Elangovan Admitted To Intensive Car

மீண்டும் தீவிர சிகிச்சை

இந்த நிலையில் இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது இந்த தகவல் கட்சியினரையும் அவரது குடும்பத்தினரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.