வெளியேற்றிய அபார்ட்மெண்ட்: வீதிக்கு வந்த விஜயலட்சுமி- என்ன நடந்தது?
சென்னையில் உள்ள தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள தனியார் அப்பார்ட்மென்டில் தரைத்தளத்தில் உள்ள வீட்டில் நடிகை விஜயலட்சுமி தங்கியிருந்தார்.
இவர் தனது சகோதரியின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக இருந்துள்ளார் பின்னர் சகோதரியுடன் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது அறைக்குள் மற்றொரு ஆண் நபர் குளித்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயலெட்சுமி,அப்பார்ட்மெண்ட் நிர்வாகத்திடம் இது குறித்து கேட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த அபார்ட்மெண்ட் நிர்வாகம், கடந்த 3 மாதமாக வாடகை கொடுக்காததால், அறையை வேறு ஒருவருக்கு ஒதுக்கிவிட்டதாகவும் உங்களின் பொருள்களை பக்கத்து அறையில் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதனால் ஆவேசமடைந்த விஜயலட்சுமி , செய்தியாளர்களை அழைத்து அப்பார்ட்மெண்ட் நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும்,தனக்கு ஹரி நாடார் இந்த இடம் பாதுகாப்பானது என கூறி அந்த அப்பார்ட்மெண்டில் தன்னை தங்க வைத்ததாகவும், அவருக்கு தெரிந்தோ தெரியாமலோ இந்த விஷயம் நடந்துள்ளதாகவும் கூறினார்.
யாருடைய தூண்டுதலின் பெயரில் தனது பொருட்களை வெளியில் தூக்கிப்போட்டு உள்ளார்கள்? என்பது எனக்கு தெரியவில்லை என கூறிய விஜயலெட்சுமி, தனது இந்த வீடியோ பதிவை பார்த்து சீமான் தனக்கு உதவ வேண்டுமென்றுகோரிக்கை வைத்துள்ளார்.
இது சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பார்ட்மெண்ட் மேலாளர், விஜயலட்சுமி தற்போது வரை வாடகை பணம் எதுவும் தரவில்லை என்பதால்தான் அவரது பொருட்களை மாற்று அறையில் வைத்துவிட்டு தங்கியிருந்த அறையை வேறு ஒருவருக்கு வாடகைக்கு விட்டதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக தகவலறிந்து சென்ற தேனாம்பேட்டை காவல்துறையினர், விஜயலட்சுமியை சமாதானப்படுத்தி வேறு இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.