இப்படி எல்லாத்தையும் தனியாருக்கு கொடுத்துட்டா ? அப்புறம் கவர்மெண்ட் எதுக்கு : பொங்கிய சீமான்
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுத்தால், அரசின் வேலை என்ன? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், சாலை போடுதல், பராமரித்தல், மின் உற்பத்தி விநியோகம், கல்வி, மருத்துவம் என அனைத்தையும் தனியாருக்கு கொடுத்தால், அரசின் வேலை என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், உங்களது வேலை என்ன? தனியாருக்கு கொடுத்துவிட்டு லஞ்சம் வாங்கிட்டு, கையெழுத்துப்போட்டுட்டு உட்கார்ந்து இருப்பது தானா? என்றும், ரூ.100 லட்சம் கோடிக்கு திட்டம் அறிவிக்கிறீர்கள், ரூ.6 லட்சம் கோடிக்கு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கொடுப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.