அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்: ப.சிதம்பரம்

covid vaccine people chidambaram
By Jon Apr 09, 2021 10:28 AM GMT
Report

தயக்கத்தை விட்டு அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்வது மிக முக்கியம் என காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம் டுவிட் செய்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை அதிதீவிரமாக பரவி வரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

மக்கள் மிக பாதுகாப்புடன் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது, இந்நிலையில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவுகிறது, எல்லோரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

முகக்கவசம் முக்கியம். தடுப்பூசி போட்டுக் கொள்வது அதைவிட முக்கியம், தயக்கத்தை விட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.