இந்தியை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்- ஆனால் கடைசியில் சந்திரபாபு நாயுடு ட்விஸ்ட்!
டெல்லியில் இந்தி பயன்படுவதால் அனைவரும் அதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடு
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு தமிழக அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேலும் தமிழகத்தில் இந்தியை திணிப்பதாக குற்றம்சாட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் இந்தி பயன்படுவதால் அனைவரும் அதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
நாம் நமது தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.அதே சமயம், டெல்லியில் தகவல் தொடர்புக்கு பயனுள்ளதாக இருப்பதால் இந்தி மொழியை கற்றுக்கொள்வது அவசியம் என்று தெரிவித்தார்.
மொழி
மேலும் இந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி என்று கூறிய அவர்,’’ வாழ்வாதாரத்திற்காக நாம் எத்தனை மொழிகளையும் கற்றுக்கொள்வோம்.ஆனால் தாய்மொழியை நாம் மறக்க மாட்டோம். அதிக மொழிகளை கற்றுக்கொள்வதசிலர் ஆங்கில மொழியை அறிவு நினைக்கிறார்கள்.
மொழி என்பது தொடர்புக்கு மட்டுமே. அது அறிவைக் கொண்டுவராது. தாய்மொழியை கற்றுக்கொள்வது எளிதானது. தாய்மொழியில்தாய்மொழியில் படிக்கும்போது கல்வி அறிவு மேம்படும்." இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.