அனைவரும் வாக்களிக்க வர வேண்டும் - நாம் தமிழர் வேட்பாளர் மேனகா வாக்காளர்களுக்கு வேண்டுகோள்
காலை 7 மணிக்கு தொடங்கிய ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாக்குப்பதிவு விறுவிறுப்பு
இதில் மொத்தமாக 77 வாக்காளர்கள் போட்டியிடுகின்றனர். அதனால் ஒவ்வொரு வாக்குசாவடியிலும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதில் காங்கிரஸ் சார்பாக இவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் ஆகியோர் பிரதான முக்கிய வேட்பாளர்களாக பார்க்கப்படுகின்றனர்.
இதில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா காலையில் வந்து தான் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடியில் வாக்களித்தார்.
வாக்காளர்களுக்கு வேண்டுகோள்
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மக்கள் வீதியில் வந்து போராடாமல் இருக்க, அனைவரும் வீடுகளில் தாண்டி வந்து வாக்களிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
மேலும், தற்போது பாதுகாப்பு அதிகாரிகள் உரிய பாதுகாப்பு அளிக்கிறார்கள். இதே நிலைமை நீடிக்க வேண்டும் எனவும் கூறிவிட்டு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்றார்.