அனைவரும் பாராட்டும் அரசாக திமுக அரசு உள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin Government of Tamil Nadu
By Thahir Feb 09, 2023 05:47 AM GMT
Report

அனைவரும் பாராட்டும் அரசாக திமுக அரசு உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஆலோசனை 

சிறப்புத்திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

everyone-praises-the-government-mk-stalin

பெரியார் சமத்துவபுரம், கிராம சுய உதவி குழுக்கள் மேம்பாடு உள்ளிட்ட திட்டங்கள் குறித்து ஆலோசனை கொள்கிறார். முதலமைச்சரின் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் நல்லாட்சியை நாம் நடத்தி வருகிறோம்.

அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் 

தமிழ்நாட்டில் 10 ஆண்டுகாலம் பெரும் தொய்வு ஏற்பட்டிருந்தது, அதை நீக்க வேண்டும். கடந்த 20 மாத காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை கண்காணிக்க வேண்டும்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் கோடிக்கு மேல் பயனடைந்துள்ளனர். 8 கோடி மக்களும் பாராட்டும் அரசாக திமுக அரசு உள்ளது. சென்னையில் மிகப்பெரிய மருத்துவமனை கிண்டியில் கட்டப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு திட்டத்தையும் கண்ணுக்கு முன்னாள் கொண்டு வந்து அதனை செயல்படுத்துங்கள். திட்டங்களை நிறைவேற்றுவதில் கணக்கும் கூடாது. அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.