‘‘எல்லாரும் ரொனால்டோவை போல இருங்கள் ‘’ - அட்வைஸ் கொடுக்கும் உலகசுகாதார அமைப்பு!

1 வருடம் முன்

பத்திரிகையாளர் சந்திப்பில் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோகோ-கோலா பாட்டில்களை அகற்றிவிட்டு தண்ணீர் பாட்டிலை வைத்த வீடியோ வைரலானது ,

மேலும், ஐரோப்பா பங்குச்சந்தையில் கோகோ-கோலா நிறுவனம் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

அதே சமயம் ரொனால்டோவின் செயலுக்கு பலவேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு தனது ட்விட்டர் பதிவில் உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க ரொனால்டோவினை போல உடல்கட்டமைப்புடன் ஆரோக்கியத்துடன் இருங்கள்.

அவரை போலவே ஆரோக்கியமற்ற குளிர்பானங்களை தவிர்த்திடுங்கள் என உலகசுகாதார அமைப்பு தனது ட்விட்டர் பதிவு மூலம் அறிவுரை வழங்கியுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.