பெற்றோர் கண்முன்னே இளைஞர் கொலை: கனிமொழி எம்பி கண்டனம்

Smt M. K. Kanimozhi Chennai
By Fathima Sep 29, 2026 07:56 AM GMT
Report

சென்னையில் அஜித் என்ற இளைஞர், தனது பெற்றோரின் கண் முன்னே வீட்டு வாசலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக எம் பி கனிமொழி கருணாநிதி தனது எக்ஸ் தளப் பதிவில், தமிழ்நாட்டில் உணவுப் பொருட்களின் விலையும், கொலைச் சம்பவங்களும் தான் அன்றாடம் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்து கொண்டிருக்கின்றன.

முதலமைச்சர் விஜய், திமுகவை விமர்சிப்பதற்கான ஸ்கிரிப்ட்டை மனப்பாடம் செய்வதில் காட்டும் அக்கறையை, தன்வசம் உள்ள காவல்துறையைச் செயல்படுத்துவதிலும் கொஞ்சம் காட்டியிருந்தால்கூட இதுபோன்ற சம்பவங்களைத் தடுத்திருக்கலாம். இனியாவது செய்வாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெற்றோர் கண்முன்னே இளைஞர் கொலை: கனிமொழி எம்பி கண்டனம் | Everyday Rising Food Prices Kanimozhi