சூயஸ் கால்வாயை முடக்கிய எவர்கிவன் கப்பல் சிக்கித் தவிக்கும் சட்ட சிக்கல்!

Egypt Suez Canal Evergiven
By mohanelango May 23, 2021 10:39 AM GMT
Report

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூயஸ் கால்வாயில் எவர்கிவன் என்கிற கப்பல் தரைதட்டி நின்றது. இதனால் சூயஸ் கால்வாயில் கபல் போக்குவரத்து ஒரு வால காலத்திற்கு முடங்கியது.

உலகின் மிகவும் பரபரப்பான கடல் வழித் தடங்களுள் சூயஸ் கால்வாயும் ஒன்று. ஐரோப்பாவிலிருந்து மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவிற்கு வருவதற்கு சூயஸ் கால்வாய் தான் துரிதமான வழி.

இந்த வழித்தடத்தை எவர்கிவன் கப்பல் முடக்கியதால் உலகப் போக்குவரத்து சில நாட்களுக்கு ஸ்தம்பித்து போனது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு எவர்கிவன் கப்பல் மீட்கப்பட்டு சூயஸ் கால்வாயில் போக்குவரத்து சீரானது.

ஆனால் எவர்கிவன் கப்பலை எகிப்து அரசு சிறைபிடித்துள்ளது. சூயஸ் கால்வாயை முடக்கியதற்காக கப்பல் நிர்வாகத்திடம் எகிப்து 6,600 கோடி ரூபாய் இழப்பீடு கோரி வருகிறது.

ஜப்பானைச் சேர்ந்த அந்த கப்பல் நிறுவனம் எவர்கிவன் முடங்கியதற்கு எகிப்தே காரணம் எனத் தெரிவித்துள்ளது. மோசமான வானிலையையும் கருத்தில் கொள்ளாமல் எவர்கிவன் செல்ல அனுமதித்தது எகிப்தின் தவறு தான் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது எவர்கிவன் கப்பல் எகிப்தின் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.