எ.வ. வேலு நல்ல ஆதாரங்களுடன் சிக்கியுள்ளார்- அமைச்சர் ராஜ்மோகன்
சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியதால் தன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக தவெக அரசு மீது திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான எ.வ. வேலு குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், எ.வ. வேலு மீதான புகாரில் நல்ல ஆதாரங்களுடன் அவர் சிக்கியிருப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது..,
முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மீது எந்தவித அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
மேலும், ஆதாரங்களின் அடிப்படையில்தான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை அவர் துணிச்சலோடும், சட்டரீதியாகவும் எதிர்கொள்ள வேண்டும்.

அவர் மீது வந்த புகாரின்பேரில்தான், துறைசார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, நல்ல ஆதாரங்களோடுதான் அவர் சிக்கியிருக்கிறார்.
இப்போது ஒருவர் சிக்கியிருக்கிறார், அடுத்து ஒவ்வொருவராக வர வேண்டும். தெரிந்தே தவறு செய்பவர்களை முதலமைச்சர் விட மாட்டார்.
மேலும், இந்த வழக்கை எதிர்கொள்வதற்கு அவருக்கு பலம் கொடுக்க வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.