சிங்கப்பூர் மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு.... வழக்கறிஞர் கூறிய உண்மை
லஞ்ச ஒழிப்புதுறையினரால் சுற்றி வளைக்கப்பட்ட அமைச்சர் வேலு சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு
தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்பு துறை போலிசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதாவது நெடுஞ்சாலைத்துறையில் பணிகளை மேற்கொண்டதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யட்பட்டது.

சாலை அமைக்காமல் சாலைகளை போட்டதாக கூறி மோசடி நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் மீது வழக்கு பாய்ந்துள்ளது.
இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராக வலியுறுத்தி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
எ.வ.வேலு உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 10 நாட்களுக்கு அவர் சிகிச்சையில் இருப்பதற்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
தற்போது சிகிச்சைக்கு பின்பு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.