13 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் இளைஞர் - கருணைக்கொலைக்கு அனுமதி?
ஹரிஷ் ராணா என்ற இளைஞர் 2013-ல் பால்கனியில் இருந்து தவறி விழுந்ததில் ஏற்பட்ட காயத்தால் அவர் கோமா நிலைக்கு சென்றார்.
கோமா
பல முன்னணி மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. எனவே, அவர் குணமடைய வாய்ப்பில்லை என எய்ம்ஸ் மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

தொடர்ந்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, ஒரு மனிதரை இப்படியே காலவரையின்றி வைத்திருக்க முடியாது என்று வேதனை தெரிவித்துள்ளது.
கருணைக்கொலை?
மேலும், ஜனவரி 13 அன்று ராணாவின் பெற்றோரை நேரில் அழைத்து ஆலோசனை நடத்திய பின்னரே, செயலற்ற கருணைக்கொலை விதிகளின்படி
சிகிச்சை நிறுத்தப்படுமா என்பது குறித்து தீர்ப்பு வழங்கப்படும். ஹரிஷ் கடந்த 13 ஆண்டுகளாக ஆழ்ந்த மயக்க நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.