கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பச்சைக்கொடி காட்டிய ஐரோப்பிய நாடுகள்
இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பச்சைக்கொடி காட்டியுள்ளன.
கொரோனாவுக்குதிராக இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசி ஆகியவை பயன்பாட்டில் உள்ளன.அதேபோல் வெளிநாடு செல்பவர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றை வைத்துக் கொள்வது அவசியமாகியிருக்கிறது.
இதனிடையேஇந்தியாவின் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட இந்தியர்கள் தங்கள் நாட்டுக்கு பயணம் செய்யும்பட்சத்தில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் நாடுகள் தெரிவித்தன.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வோருக்கு மட்டுமே கட்டுப்பாடுகளற்ற அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டது. இது கோவாக்சின், கோவிஷீல்டு மட்டுமே பயன்பாட்டில் உள்ள இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஐஎம்ஏவின் பரிந்துரைப் பட்டியலில் கோவாக்சின், கோவிஷீல்டு இடம்பெறாத நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்லோவேனியா, க்ரீஸ், ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து ஆகிய 7 நாடுகள் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.