ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு உலைகள் அமைந்துள்ள உக்ரைனின் எனர்கோடர் நகரத்தை கைப்பற்றியது ரஷ்யா
RussiaUkraineCrisis
NuclearPowerPlant
EuropesBiggest
PowerPlantUkraine
PowerPlantSeizedRussia
By Thahir
உக்ரைன் மீது ரஷ்யா 9-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் நிலையில் உக்ரைனில் உள்ள ஜபோரிஜியாவை ரஷ்யா கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஐரோப்பியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா மீது ரஷ்யா படையினர் பல்வேறு பக்கங்களிலிருந்தும் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது.

ஏற்கனவே ரஷ்யா படைகள் தாக்குதல் நடத்தியதில் அணு உலைகள் மீது தீ பிடித்தது. அணு மின் நிலையம் வெடித்தால் சோர்னோபிலை விட 10 மடங்கு பெரியதாக இருக்கும் என்றார்.
ரஷ்யா படைகள் தற்போது ஐரோப்பியாவின் மிகப்பெரிய ஜபோரிஜியா அணு மின் நிலையத்தை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.