சுவீடனை தோற்கடித்து முதல்முறையாக கால்இறுதிக்கு முன்னேறிய உக்ரைன் அணி!
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சுவீடனை தோற்கடித்து முதல்முறையாக உக்ரைன் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டமொன்றில் உக்ரைன்-சுவீடன் அணிகள் சந்தித்தன. ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதிய இரு அணியினரும் தொடக்கம் முதலே கோல் அடிக்க தீவிரம் காட்டினர்.
இரு அணிகளும் முதல் பாதியில் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டிய நிலையில் இரண்டாம் பாதியில் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் சமனில் முடிய கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதன் கடைசி நிமிடத்தில் ஜின்சென்கோ இடது பக்கத்தில் இருந்து தூக்கியடித்த பந்தை கோல் பகுதியில் நின்ற உக்ரைனின் மாற்று ஆட்டக்காரர் ஆர்டெம் டோவ்பைக் கோலாக மாற்றினார்.
இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் உக்ரேனின் ஸ்வீடனை தோற்கடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றது.