யூரோ கோப்பை கால்பந்து: காலிறுதிக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் அணிகள்
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நேற்று நடந்த இருவேறு ஆட்டங்களில் சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் அணிகள் வெற்றி பெற்றன.
இதில் ஒரு ஆட்டத்தில் ஸ்பெயின், குரோஷியா அணிகள் மோதின. இதில் இருபதாவது நிமிடத்தில் முதல் கோலை குரோஷியா அடித்தது. அதேசமயம் 37,58,76 ஆகிய நிமிடங்களில் ஸ்பெயின் கோல் எடுத்து முன்னிலை பெற்றது. இதனிடையே யாரும் எதிர்பாராதவிதமாக ஆட்டம் முடியவிருந்த கடைசி ஏழு நிமிடங்களில் குரோஷியா அணி அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து ஆட்டத்தை சமன் செய்தது.
இதனை அடுத்து ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் அணி 2 கோல்களை அடித்து 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.
இதேபோல் நடந்த மற்றொரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி பிரான்ஸ் அணியுடன் மோதியது. ஆட்டத்தின் முடிவில் இரண்டு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்து சமனில் இருந்தது.
இதனையடுத்து கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது இரு அணிகளும் கோல் படிக்காததால் பெனால்டி ஷூட் அவுட் முறையில் சுவிட்சர்லாந்து அணி 5- 4 என்ற கணக்கில் வெற்றியை பதிவு செய்தது.