யூரோ கோப்பை கால்பந்து: இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளிக்குமா டென்மார்க்?

Euro Cup 2021 England vs Denmark
By Petchi Avudaiappan Jul 07, 2021 10:40 AM GMT
Report

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடக்கும் 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து - டென்மார்க் அணிகள் மோதுகின்றன.

தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் இங்கிலாந்து நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்கவில்லை. மேலும் உள்ளூர் சூழலில் ஆடுவதால் இங்கிலாந்துக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக காணப்படுகிறது.

அதேசமயம் டென்மார்க் முதல் இரு லீக்கில் தோற்றாலும் அதன் பிறகு எழுச்சி பெற்று காலிறுதியில்செக்குடியரசை வீழ்த்தி 29 ஆண்டுக்கு பிறகு அரைஇறுதிக்கு வந்துள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 21 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 12-ல் இங்கிலாந்தும், 4-ல் டென்மார்க்கும் வெற்றி பெற்றன. 5 ஆட்டம் டிராவில் உள்ளது.

இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.