ரத்தான யூரோ கோப்பை மீண்டும் நடந்தது - டென்மார்க் அணியின் சோகத்தை பயன்படுத்தி 1 கோல் அடித்து வெற்றி பெற்ற பின்லாந்து அணி!
யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற டென்மார்க் - பின்லாந்து இடையேயான இரண்டாவது போட்டி வீரர்களில் வேண்டுகோளை ஏற்று மீண்டும் நடத்தப்பட்டது.இதில் பின்லாந்து அணி ஒரு கோல் அடித்து 1:0 என்ற கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளை பெற்றது.
யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள டென்மார்க் அணியும் பின்லாந்து அணியும் நேருக்கு நேர் மோதி கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் முதல் பாதியில் டென்மார்க் அணியின் முன்கள வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் நிலை தடுமாறி மைதானத்தில் விழுந்து அசைவின்றி கிடந்தார்.
இதையடுத்து உடனே அங்கு வந்த மருத்துவ குழுவினர் எரிக்சனை பரிசோதனை செய்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதைத் தொடர்ந்து மெடிக்கல் எமெர்ஜென்சி காரணமாக போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வீரர்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் போட்டி நடத்தப்பட்டது.
இதில் முதல் பாதி ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் பின்லாந்து அணி ஒரு கோல் அடித்து 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளை பெற்றது.