யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து அணி!

sports match euro football
By Anupriyamkumaresan Jul 08, 2021 07:36 AM GMT
Report

யூரோ கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.

லண்டன் வெம்பிளே மைதானத்தில் நடந்த அரை இறுதி ஆட்டத்தின் முதல் பாதியின் 30வது நிமிடத்தில், டென்மார்க் வீரர் மிக்கேல் டேம்ஸ்கார்டு கோல் அடித்தார்.

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து அணி! | Euro 2021 Football England Win For Next Round

தொடர்ந்து 39வது நிமிடத்தில் டென்ம்கார்க் வீரர் சைமனின் சுய கோல் உதவியுடன் இங்கிலாந்து அணி ஆட்டத்தை சமன் செய்தது. 2-ம் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காத நிலையில், கூடுதல் நேரத்தில் இங்கிலாந்து வீரர் ஹாரி கானே கோலை திருப்பி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 2க்கு 1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.