யூனிஸ் புயல் - இருளில் தவிக்கும் England மக்கள்

eunicestormuk shatterslivesofpeople 4lakhspeopleindarkness
By Swetha Subash Feb 20, 2022 11:23 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

யூனிஸ் புயல் இங்கிலாந்தைத் தாக்கியதால் நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கடந்த 32 வருடங்களில் இல்லாத அளவில் மிக மோசமான புயலாக யூனிஸ் புயல் கருதப்படுகிறது.

இங்கிலாந்தின் வைட் தீவில் மணிக்கு 122 மைல் வேகத்தில் காற்று வீசியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு ஐரோப்பாவை யூனிஸ் புயல் தாக்கியது.

மணிக்கு 196 கி.மீ. வேகத்தில் வெள்ளிக்கிழமை வீசிய யூனிஸ் புயலால் சேதங்கள் அதிகரித்துள்ளது.

பிரிட்டன், அயா்லாந்து, பெல்ஜியம், நெதா்லாந்து ஆகிய பகுதிகளில் சுறாவளிக் காற்றில் மரம் முறிந்து விழுந்தும், பறந்து வந்த பொருள்கள் தாக்கியும் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிய வருகிறது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் தொடா்ந்து பலத்த காற்று வீசும் என்று அதிகாரிகள் எச்சரித்திருத்துள்ளனர்.

கடந்த காலங்களை விட அதீத பாதிப்புகளை ஏற்படுத்திய புயலாக யூனிஸ் புயலால் பிரிட்டனில் சுமார் 400,000 மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர்.

மின்சாரத்தை மீட்டெடுக்கும் பணியில் மின்ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அயர்லாந்து, பிரிட்டன், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் மரங்கள் விழுந்ததில் உயிரிழப்பும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது.