எங்க போனாலும் ஏன் அட்ஜஸ்ட்மென்ட் பத்தியே கேக்குறீங்க..! கடுப்பான எதிர்நீச்சல் நடிகை..!

Serials Tamil TV Serials Ethirneechal
By Karthick Jan 05, 2024 03:55 PM GMT
Report

பேட்டி ஒன்றில் இது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிரபல எதிர்நீச்சல் தொடர் நடிகை.

எதிர்நீச்சல் தொடர்

மக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்ற தொடராக எதிர்நீச்சல் அமைந்துள்ளது. இந்த தொடரில் ஜான்சி ராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் காயத்ரி கிருஷ்ணன்.

ethirneechal-actress-about-adjustment-in-serial

அதே போல வரும் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் நடித்து நல்ல வரவேற்பை ரசிகர்களிடத்தில் பெற்றுள்ளார் காயத்ரி கிருஷ்ணன். மாடலிங் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர், தற்போது சின்னத்திரையில் பிஸியான நடிகை.

எப்ப பாத்தாலும்

இந்நிலையில், தான் இவர் அளித்த பேட்டியில், சினிமா துறையில் இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அந்த பேட்டியில், ஏன் எந்த பேட்டிக்கு பெண் ஒருவர் வந்தாலும் இதே கேள்வியை கேட்குறீர்கள் என கோபத்துடன் வினவினார்.

ethirneechal-actress-about-adjustment-in-serial

நடிகைகளுக்கு வேண்டுமென்றால் சரி தான், வேண்டாமென்றால் விலகி விடலாம், ஆனால் அதனை விட்டு, எப்போதும் இத பத்தியே பேசிட்டு இருக்குறதுக்கு எதுக்கு என்றும் அவர் அந்த பேட்டியில் கேட்டுள்ளார்.