தொப்பை இருந்தால் போதும்..உடனே கல்யாணம் தான் - எங்கு தெரியுமா?
பெண்கள், தொப்பை வைத்திருக்கும் ஆண்களையே விரும்பி திருமணமும் செய்துகொள்கின்றனர்.
தொப்பை திருவிழா
எத்தியோப்பியாவில், 'ஓமோ' பள்ளத்தாக்கில் வசிக்கும் 'போடி' பழங்குடியின மக்கள் விநோத திருவிழாவை கொண்டாடுகின்றனர். இதில், போட்டி ஒன்றை வைத்து அதில், யார் அதிகம் பருமனாக, பெரிய தொப்பையை வைத்திருக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகின்றனர்.
[ZMCFFV[
இது 'கேல்' திருவிழா என்று அழைக்கப்படுகிறது. இந்த பழங்குடியினர் உணவை வேட்டையாடி பெரும் வாழ்க்கை முறையினை கொண்டிருப்பவராவார்கள். இதனால் இவர்கள் உடல்களில் கொழுப்புகள் அதிகம் சேராது.
திருமணம்
எனவே இந்த திருவிழாவுக்கு 6 மாதத்திற்கு முன்னரே தங்கள் உடல் எடையை அதிகரிக்கும் பயிற்சியில் போட்டியாளர்கள் இறங்கிவிடுவார்கள். இதற்காக அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவு பசுவின் பால் கலந்த ரத்தம்தான். இவர்களுக்கு தினமும் குறிப்பிட்ட அளவு பசுவின் ரத்தம் உணவாக வழங்கப்படும்.

அதில் கொஞ்சம் பாலும் கலக்கப்பட்டிருக்கும். ஆறு மாதத்திற்கு இவர்களுக்கு வேறு உணவே கிடையாது எனக் கூறப்படுகிறது. போட்டியில் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டுவிட்டால் அவர் தன் வாழ்நாள் முழுக்க அக்கூட்டத்தின் ஹீரோவாக கருதப்படுவார்.
இவரை திருமணம் செய்துகொள்ள அக்குழுவின் பெண்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்வார்களாம்.
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan