உணவு, தண்ணீர் சாப்பிட்டு 16 ஆண்டுகள் ஆச்சு..மிரண்ட மருத்துவ உலகம் -அந்த பெண் சொன்ன பதில்!
16 ஆண்டுகளாக உணவு, தண்ணீர் இல்லாமல் வாழும் பெண் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எத்தியோப்பியா
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு வேலை உணவு சாப்பிடவில்லை என்றால் தலைச் சுற்றல் மயக்கம், உடல் சோர்வு, அசதி உள்ளிட்டவற்றோடு காணப்படுவோம்.
ஆனால்16 வருடம் பசியே இல்லாமல் தண்ணீர், குடிக்காமல் சாப்பாடு இல்லாமல் வாழும் பெண்ணை கண்டு மருத்துவ உலகம் அதிசயித்து உள்ளது.
எத்தியோப்பியா ஜிம்மாவில் உள்ள சிறிய கிராமத்தில் யூடியூபர் ட்ரூ பின்ஸ்கி என்பவர் வாழ்க்கை முறை குறித்து விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது முலுவொர்க் அம்பாவ் பெண் 16 வருடம் உணவு ஏதும் உட்கொள்ளாமல் வாழ்வதாகத் தெரிவித்தனர்.
எப்படி உயிர்வாழ முடியும்?
இது குறித்து அந்த பெண்ணிடம் பேட்டி எடுத்துள்ளார்.என் குடும்பத்துடன் நான் வசித்து வந்தேன். ஒருநாள் காலை உணவைச் சாப்பிட்டு பள்ளிக்குப் போகச் சொன்னார்கள்.
நான் சாப்பிட்டு விட்டேன் என்று பொய் சொன்னேன். ஆனால் அன்று முதல் தாகம் எடுக்கவில்லை. பசியே வரவில்லை என்று கூறினார்.
மேலும் 16 ஆண்டுகளாகச் சிறுநீர் மற்றும் மலம் கழிக்கவோ வேண்டிய தேவை ஏற்படவே இல்லை என்று கூறினார். இவருக்குத் திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.
இத்தனை வருடங்களாகத் தண்ணீர் கூட குடிக்காமல் எப்படி உயிர்வாழ முடியும்? இதற்கு மருத்துவர்களால் கூட இதுவரை விளக்கம் கொடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.