சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகுமா? தொடரும் எதிர்ப்பும்,ஆதரவும்..!
நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை திரையரங்கில் வெளியிட கூடாது என திரையரங்கு உரிமையாளர்களுக்கு கடிதம் மூலம் பாமக,வன்னியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் நாளை முதல் தமிழகம் முழுவதும் வெளியாக உள்ளது.சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகும் இந்த படத்தில் சத்யராஜ்,பிரியங்கா மோகனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
கடலூரில் வெளியிடக் கூடாது என்று பா.ம.க மாணவர் அணியின் மாநிலச் செயலாளர் விஜயவர்மன் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்தில், ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக காட்டியிருந்தார். அதற்கு மன்னிப்பு கோரவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், சூர்யாவுக்கு ஆதரவாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் பா.ம.கவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கும் இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு இவர்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் களைவதற்கும்,
மிரட்டலுக்குப் பணியாமல் படத்தை வெளியிடுவதற்கு உகந்தச் சூழலை உருவாக்குவதற்கும் தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் பெயரால் விடுக்கப்பட்டுள்ள இம்மிரட்டலுக்கு எதிராக குரலெழுப்புமாறு கருத்துரிமையில் நம்பிக்கையுள்ள யாவரையும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.