அதிகரிக்கும் வெப்ப அலை.., மருத்துவமனையில் தனி வார்டு அமைக்க தமிழக அரசு திட்டம்

Summer Season
By Yashini Apr 27, 2026 11:32 AM GMT
Report

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வெப்ப அலையை முன்னிட்டு சுகாதாரத் துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாவட்ட சுகாதார அலுவலர்கள் உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கோடை வெப்பம் அதிகரித்ததால் மக்கள் நீர்ச்சத்து இழப்பு மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

அதிகரிக்கும் வெப்ப அலை.., மருத்துவமனையில் தனி வார்டு அமைக்க தமிழக அரசு திட்டம் | Establishment Of Special Wards In Tn Govt Hospital

இதனை தடுக்க அரசு மருத்துவமனைகளில் ஹீட் ஸ்ட்ரோக் சிறப்பு வார்டுகள் அமைக்க உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ORS கரைசல் தடையின்றி வழங்கப்படும்.

விவசாய மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கும் ORS வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் அரசு மருத்துவமனைகளில் ORS கரைசலை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.