Wednesday, May 7, 2025

டி20 போட்டி : விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு

Virat Kohli T20 World Cup 2022
By Irumporai 3 years ago
Report

இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தூரில் நடைபெற உள்ள டி20 போட்டியில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விராட் கோலிக்கு ஓய்வு

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 டி20 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் 2-0 என்கிற நிலையில் தொடரை கைப்பற்றிய நிலையில், 3வது டி20 போட்டி இன்று இந்தூரில் நடைபெற உள்ளது.

டி20 போட்டி : விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு | Est For Kholi And Kl Rahul For 3Rd T20

கடைசி டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமாளிக்குமா இந்தியா

அடுத்து வரவுள்ள உலகக்கோப்பை டி20 போட்டிக்கு தயாராவதற்காகவும், தொடர்ந்து விளையாடி வருவதாலும் இந்த ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விராட் கோலிக்கு பதில் ஷ்ரேயஸ் ஐயர் களமிறங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

காயத்தால் ஓய்வில் இருந்த தீபக் ஹூடாவிற்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கவுகாத்தியில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் 28 பந்துகளில் 57 ரன்கள் எடுத்ததற்காக கே.எல்.ராகுல் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விராட் கோலி ஆட்டமிழக்காமல் 28 பந்துகளில் 49 ரன்கள் எடுத்திருந்தார் எனது குறிப்பிட தக்கது.