ஸ்டாலின் அரசை பாராட்டிய சத்குரு! எதற்கு தெரியுமா?

sadhguru tn govt esha appreciate stalin government
By Anupriyamkumaresan Aug 08, 2021 07:16 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

தமிழகத்தில் வேளாண் துறைக்கு தனிபட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பிற்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் அரசை பாராட்டிய சத்குரு! எதற்கு தெரியுமா? | Esha Sadhguru Appreciate Stalin Government

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ வரலாற்று சிறப்புமிக்க வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கும் தமிழக அரசுக்கு பாராட்டுகள்.

மிக தொன்மையான வேளாண் பாரம்பரியம் கொண்ட, இயற்கை விவசாயத்தில் முன்னோடியான தமிழகம் இதன் மூலம் மகத்தான பொருளாதார, சுற்றுச்சூழல், ஆரோக்கிய பலன்களை நிச்சயம் பெறும் என கூறி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.