முன்னாள் காதலனுடன் ஸ்கூட்டியில் பறந்த மனைவி - சேசிங் செய்து துரத்தி பிடித்த கணவன்
உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த கணவன் - மனைவிக்கு இடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
திருமணத்திற்கு பிறகு தொடர்ந்த காதல்
இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. திருமணத்திற்கு முன் தொழில் அதிபர் ஒருவரை காதலித்து வந்த அந்த பெண் பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் வேறொரு நபரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர் பெண்ணின் குடும்பத்தினர். இந்த நிலையில் தனது காதலனை பிரிய மனம் இல்லாத அந்த பெண் திருமணத்திற்கு பிறகும் தனது காதலை தொடர்ந்திருக்கிறார்.
இதனால் அடிக்கடி செல்போனில் பேசுவது, தனிமையில் சந்திப்பது என இருந்து வந்துள்ளார். மனைவியின் செயலால் சந்தேகம் அடைந்த கணவன் மனைவியை கண்காணிக்க செய்துள்ளார்.
அப்போது தான் மனைவி வேறொருவருடன் தொடர்பில் இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் கணவனை விட்டுவிட்டு தனது காதலனை கரம் பிடிக்க பறந்தார் அந்த பெண். வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய கணவர், மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
காதலனுடன் ஓட்டம் - துரத்தி பிடித்த கணவன்
மேலும் மனைவியை தேடி பல இடங்களில் தனது இருசக்கர வாகனத்தில் தேடியுள்ளார்.அப்போது தனது காதலனுடன் மனைவி அடையானம் தெரிய கூடாது என்பதற்காக கூலிங் க்ளாஸ், துப்பட்டாவல் முகத்தை முடிக்கொண்டு ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார்.
அவரை அடையாளம் கண்ட அவரது கணவன் அவரை தனது பிள்ளையுடன் துரத்தியுள்ளார். இதையறிந்த அவரது மனைவி தனது காதலனிடம் வண்டியை அடித்து ஓட்டு..என் கணவன் துரத்துரான் என்று கூறவே காதலனோ..வண்டியை மின்னல் வேகத்தில் இயக்கியுள்ளார்.
விடாமல் துரத்திய கணவன் ஒரு வழியாக தனது மனைவியை மடக்கி பிடித்தார். பின்னர் மனைவியை நடுரோட்டில் தாக்கிய அவர் தனது குழந்தையுடன் வந்திடு என கூறியுள்ளார்.
இதை காதில் வாங்காத மனைவி தான் காதலனுடன் தான் செல்வேன் என கூறியுள்ளார். மனைவியை கணவன் துரத்தி பிடிக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
#आगरा सावधानी हटी दुर्घटना घटी ?
— Aviral Singh (@aviralsingh7777) September 12, 2022
सड़क पर ड्रामा
पति ने पीछा कर पत्नी को प्रेमी के साथ पकड़ा
सड़क पर पत्नी का पीछा करते हुए बनाया विडीओ #ViralVideo #UttarPradesh #Agra pic.twitter.com/tGgdtJm6YN