திருமணமான சில மணி நேரத்தில் ஓட்டம் பிடித்த கணவர் - நிற்கதியாய் நிற்கும் பெண்

tiruvallur marriageissue
By Petchi Avudaiappan Feb 18, 2022 10:37 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

திருவள்ளூரில் போலீசார் திருமணம் செய்து வைத்த சில மணி நேரத்திலேயே கணவர் சிறிது நேரத்திலேயே ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தை சேர்ந்த என்பவரது மகள் லட்சுமி டிப்ளமோ நர்சிங் முடித்துள்ளார். இவர் படிக்கும் காலத்தில் இருந்தே கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக லட்சுமி அவரது வீட்டு அருகிலு்ள்ள  சின்னராசுவை காதலித்து வந்துள்ளார். 

திருவள்ளூர் அடுத்த போளிவாக்கத்தில் உள்ள அமேசான் விநியோகப் பிரிவில் வேலை செய்து வரும் சின்னராசு கடந்த 4 ஆண்டுகளாக லட்சுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். இதில்  2 முறை கருக்கலைப்பும் நடந்துள்ளது. 

இதனிடையே சின்னராசுவின் வீட்டார் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முடிவெடுத்ததாக தகவல் வெளியாக கடுப்பான லட்சுமி சின்னராசுவின் பெற்றோரிடம் சென்று சின்னராசு தன்னை காதலித்ததாதகவும், தற்போது வேறு பெண்ணை எப்படி திருமணம் செய்யலாம் என  நியாயம் கேட்டுள்ளார். அதற்கு சின்னராசு குடும்பத்தினர் தகாக வார்த்தைகளால் பேசியுள்ளனர். \

இதனைத் தொடர்ந்து லட்சுமி ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை போலீசார் விசாரித்த போது சின்னராசு தன் தவறை உணர்ந்து லட்சுமியை திருமணம் செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பின் ஊத்துக்கோட்டையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் தேதி இருதரப்பு உறவினர்கள் ஒரு சிலர் முன்னிலையில் திருமணம் நடந்துள்ளது. 

பின் தம்பதிகள் இருவரும் தேவாலயத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சிறிது தூரம் சென்ற நிலையில் சின்னராசு மனைவி லட்சுமியை கீழே இறக்கிவிட்டு,சிறிது நேரத்தில் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதனால்  அதிர்ச்சி அடைந்த லட்சுமி  ஊத்துக்கோட்டை டிஎஸ்பி திருவள்ளூர் எஸ்பி மற்றும் காஞ்சிபுரம் சரக டிஐஜி உள்ளிட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் லட்சுமி சின்னராசுவின் வீட்டு வாசலில் அமர்ந்து தற்போtஹு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரபபு ஏற்பட்டுள்ளது.