அப்பாவிடம் திட்டு வாங்காமல் தப்பிக்க சிறை செல்ல முடிவு' - பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!
தன்னுடைய தந்தை கண்டித்து கொண்டே இருப்பதால் சிறைக்குச் செல்ல முடிவெடுத்து, பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த 22 வயது இளைஞரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று நள்ளிரவு டெல்லி காவல் துறையினரின் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த மர்ம நபர் ஒருவர் பிரதமர் மோடியை தான் கொலை செய்ய போவதாக தெரிவித்துள்ளார்.
அழைப்பு வந்த எண்ணை கண்டறிந்த டெல்லி காவல்துறையினர் 22 வயதான என அர்மான் என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அந்த இளைஞரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தான் போதையில் தவறுதலாக பேசி விட்டதாக கூறினார்.
மேலும், தனது தந்தை எப்பொழுதும் திட்டிக் கொண்டே இருப்பதால் சிறையில் இருக்க விரும்பியதாக கூறியுள்ளார்.
ஆனாலும் இந்த விவகாரத்தில் யாரேனும் பின்புலத்தில் உள்ளார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.