ஸ்பீடாக நகர்ந்த எஸ்கலேட்டர்; உயிரை காப்பாற்ற போராடிய மாணவர்கள் - வீடியோ வைரல்

Viral Video Bangladesh
By Sumathi Dec 17, 2025 05:05 PM GMT
Report

மாணவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றப் போராடும் வீடியோ வைரலாகி வருகிறது.

 தொழில்நுட்பக் கோளாறு

டாக்காவில் உள்ள BRAC பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, எஸ்கலேட்டர் திடீரென மிக அதிக வேகத்தில் நகரத் தொடங்கியது.

ஸ்பீடாக நகர்ந்த எஸ்கலேட்டர்; உயிரை காப்பாற்ற போராடிய மாணவர்கள் - வீடியோ வைரல் | Escalator Suddenly Speeds Up Viral Video

இதனால் உள்ளே இருந்த மாணவர்கள் கூச்சலிட்டனர். இதுதொடர்பான 16 வினாடி கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதில் எஸ்கலேட்டர் கீழே வந்தவுடன், மாணவர்கள் கீழே விழாமல் இருக்க குதித்து ஓடுவதைக் காணலாம். அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் குறித்து பல்கலைக்கழகம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. முன்னதாக ரோமில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்து, அதில் பலர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.