உறுதியேற்பில் பிழையா? மீண்டும் பதவியேற்கிறார் கேரள எம்.எல்.ஏ!
கேரளாவில் தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட எம்.எல்.ஏ, ஏ.ராஜா,உறுதியேற்பில் பிழை விடுத்ததால்,மீண்டும் உறுதி மொழி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 20-ஆம் தேதி கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்றது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புமாநிலசட்டசபைகூட்டத்தொடரநடைபெற்றது.
அதில்,புதிய உறுப்பினர்கள் எம்.எல்.ஏ-வாக பதவி ஏற்றனர்.அவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பி.டி.ஏ.ரகிம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதில், கேரள மாநிலம் தேவிகுளம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற ஏ.ராஜா அவர்கள் சட்டமன்றத்தில் தமிழில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
இந்த நிலையில்,பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட எம்.எல்.ஏ, ஏ.ராஜா உறுதியேற்பின் போது உளமாற அல்லது கடவுள் அறிய உறுதி ஏற்கிறேன் என கூற தவறியதால் ,மீண்டும் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.